/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சரக்கு வாகனங்களில் காய்கறிகள் விற்பனை தராசு எடை குறைவால் மக்கள் அதிருப்தி

ADDED : ஜூன் 01, 2024 04:17 AM
திருவாடானை: சரக்கு வாகனங்களில் காய்கறி விற்பனையாளர்கள் எடை தராசில் முத்திரையிடாமல் பொருட்களை விற்பதால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
திருவாடானை, தொண்டி மற்றும் கிராமங்களில் வெளிமாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சரக்கு வாகனங்களில் வைத்து கூவி விற்பனை செய்கின்றனர். சில வாகன வியாபாரிகள் தராசில் முறைகேடுகள் செய்து அளவுகளை குறைத்து வழங்குவதாக புகார் எழுந்துள்ளது.
ஒரு கிலோ பழங்கள் அல்லது காய்கறிகள் வாங்குவோருக்கு தராசில் அளவு சரியாக காட்டப்படுகிறது. அப்பொருளை வேறோரு தராசில் எடையிடும் போது எடையளவு குறைந்து காணப்படுகிறது. பெரும்பாலானவர்கள் நம்பிக்கை அடிப்படையில் தராசில் நிறுத்தி தரும் பொருட்களின் எடையை மறுஅளவு செய்து சோதனை யிடுவது கிடையாது.
குறிப்பிட்ட கால அவகாசத்தில் தராசுகள் தொழிலாளர் நலத்துறையினரால் சோதனை செய்யப்பட்டு மறு முத்திரையிட்டு சான்று பெறப்பட வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றாமல் பலர் தராசுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் நியாயமாக வர்த்தகம் செய்யும் வியாபாரிகளும், மக்களின் சந்தேக பார்வைக்கு ஆளாகின்றனர். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.