/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் நடைபாதை ஆக்கிரமிப்பால் மக்கள் சிரமம்
/
முதுகுளத்துாரில் நடைபாதை ஆக்கிரமிப்பால் மக்கள் சிரமம்
முதுகுளத்துாரில் நடைபாதை ஆக்கிரமிப்பால் மக்கள் சிரமம்
முதுகுளத்துாரில் நடைபாதை ஆக்கிரமிப்பால் மக்கள் சிரமம்
ADDED : ஆக 12, 2024 05:04 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துாரில் ரோட்டோர நடைபாதை ஆக்கிரமிப்புகளால் நடந்து செல்வதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் துவங்கி பஸ் ஸ்டாண்ட், பஜார், தேரிருவேலி முக்கு ரோடு, காந்தி சிலை வரை ரோட்டோரத்தில் இருபுறத்திலும் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.5.42 கோடியில் கழிவுநீர் கால்வாய், பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டது.
முதுகுளத்துாரில் வாரந்தோறும் வியாழக் கிழமை வாரச்சந்தை நடக்கிறது.
முதுகுளத்துார் தாலுகாவிற்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.
புதிதாக அமைக்கப்பட்ட நடைபாதையில் சிலர் ஆக்கிரமித்து பொருட்கள் வைத்திருப்பதால் சந்தைக்கு செல்லும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். முதியவர்கள் நடப்பதற்கு முகம் சுளிக்கின்றனர்.
எனவே நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.