/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மக்கள் திட்டங்களை துாக்கி வராமல் செங்கலை துாக்கி வருகிறார்: உதயநிதி பரமக்குடியில் நடிகை விந்தியா கிண்டல் பேச்சு

ADDED : ஏப் 01, 2024 10:00 PM
பரமக்குடி : மக்கள் திட்டங்களை துாக்கி வராமல் செங்கலை துாக்கி வருகிறார் உதயநிதி என்று பரமக்குடியில் நடிகை விந்தியா பேசினார்.
ராமநாதபுரம் லோக்சபா அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து நடிகை விந்தியா பரமக்குடி பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் பிரசாரம் மேற்கொண்டார். அவர் பேசியதாவது: அன்று பிரிட்டீஷாரிடமிருந்து நாட்டைக் காக்க போராட்டம் நடத்தினார்கள். அதே போல் தி.மு.க., பா.ஜ.,விடமிருந்து நாட்டைக் காக்க அ.தி.மு.க., போராடுகிறது.
சமூக வலைதளங்களை பார்த்து அரசியலை தெரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க., ஆட்சியில் எந்த நல்ல திட்டமும் இல்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டத்தையும் நிறுத்தினர். உதயநிதி கடந்த தேர்தலில் கொண்டு வந்த அதே செங்கலுடன் வருகிறார்.
தேர்தலில் செங்கலை துாக்குவார். கஞ்சாவை துாக்குவது, நீட்டை துாக்குவது அவர்களுக்கு கஷ்டம். ஸ்டாலின் குடும்பம் மட்டும் சிரிக்க வேண்டும். மற்றவர்கள் சிரித்தால் அவர்களுக்கு ஆகாது.
தண்ணீர் படாமல் சாயம் போனவர் கமல். தி.மு.க., விடம் கூட்டணி பேச உதயநிதியிடம் கைகட்டி நிற்கிறார். வைகோ மூத்த அரசியல் வாதி. வாரிசை வளர்க்க வேண்டும் என்பதற்காக ஒரு சீட்டை வாங்கி உள்ளார்.
திருமா பாவம். வார்த்தையில் பேசிய வீரம் இல்லை. காங்., ல் வேட்பாளராக நிற்க ஆளில்லை. சரத்குமார் கட்சியை கொடுத்து ஒரு சீட் வாங்கி உள்ளார். டி.டி.வி., ஓ.பி.எஸ்., மரியாதை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி பேச விருப்பம் இல்லை.
நம் ஒற்றுமையை கெடுக்க தி.மு.க., பா.ஜ., நினைக்கிறார்கள். தி.மு.க., போன தேர்தலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. ஸ்டாலின் 500 ரூபாய்க்கு சிலிண்டர் கொடுத்தால் அதில் காஸ் இருக்காது என்றார்.