/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய மக்கள் கோரிக்கை
/
குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய மக்கள் கோரிக்கை
குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய மக்கள் கோரிக்கை
குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய மக்கள் கோரிக்கை
ADDED : மே 15, 2024 06:44 AM

ராமநாதபுரம்: முதுகுளத்துார் தாலுகா சாம்பக்குளம் இந்திரா நகர்குடியிருப்பில் குடிநீர் தொட்டியை சேதப்படுத்தியவர்களைகைது செய்ய வேண்டும்.போலீசார் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
சாம்பளக்குளம் இந்திராநகர் ஆதிதிராவிடர் பொதுநலச் சங்கம்தலைவர் சங்கர் தலைமையில் அப்பகுதியைச் சேர்ந்த 50க்குமேற்பட்டவர்கள், வி.சி.,கட்சி, ஐந்திணை மக்கள் கட்சியினர்இணைந்து ராமநாதபுரம் கலெக்டர், எஸ்.பி., அலுவலகத்தில்மனு அளித்தனர்.
அதில், சாம்பக்குளம் இந்திராநகரில் 70 வீடுகள் உள்ளன. இங்கு குடிநீர் சரியாக வருவது இல்லை. இதனால் பரமக்குடி- முதுகுளத்துார் ரோட்டோரத்தில் உள்ள காவிரி குடிநீர் வால்வுகசியும் இடத்தில்தொட்டி அமைத்து மக்கள் குடிநீர் பிடிக்கின்றனர்.
இந்நிலையில் ஒரு சமுதாயத்தை சேர்ந்த சிலர் குடிநீர்தொட்டியை சட்டத்திற்கு புறம்பாக சேதப்படுத்தியுள்ளனர்.அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இந்திராநகர்மக்கள் மீது கீழத்துாவல் போலீசார் பொய் வழக்குபதிவு செய்துள்ளனர்.
அவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும்.சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும்.அவர்களுக்கு உடந்தையாக உள்ள போலீசார் மீதுஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவலியுறுத்தினர்.

