/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதமடைந்த ரோட்டில் சிரமப்படும் மக்கள்
/
சேதமடைந்த ரோட்டில் சிரமப்படும் மக்கள்
ADDED : மே 24, 2024 02:12 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சிறுமணியேந்தல் கிராமத்திற்கு செல்லும் தார் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துார் அருகே சிறுமணியேந்தல் கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். முதுகுளத்துார்--அபிராமம் ரோடு சிறுமணியேந்தல் ரோட்டில் இருந்து 2 கி.மீ., உள்ளது.
இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு ரோடு அமைக்கப்பட்டது.
அதன் பின் முறையாக பராமரிப்பு செய்யாததால் ரோடு குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. கிராமத்திற்கு குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் பஸ் வசதி உள்ளது. மற்ற நேரங்களில் மக்கள் சரக்கு வாகனம், டூவீலரில் அபிராமம், முதுகுளத்துார் செல்கின்றனர்.
சேதமடைந்துள்ள ரோட்டில் செல்வதற்கு கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே ரோடு அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர்.