ADDED : மே 17, 2024 07:11 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பேரூராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு முதுகுளத்துார் துணை மின்நிலையத்திலிருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் முதுகுளத்துார் பகுதியில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமுறை அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வந்தது. 30க்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரிக் பொருட்கள் பழுதடையும் நிலை ஏற்பட்டது. பேரூராட்சி சார்பில் திறந்து விடப்படும் தண்ணீரும் முறையாக திறந்து விட முடியவில்லை. அரசு அலுவலங்களில் பணிகள் செய்ய முடியாமலும் தவித்தனர்.
மருத்துவமனையில் நோயாளிகள் சிரமப்பட்டனர். கோடை காலம் என்பதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே முதுகுளத்துாரில் பலமுறை ஏற்படும் மின்தடையை சரிசெய்ய மின்வாரியத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

