/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாலை நேரம் கூடுதல் பஸ் இயக்க மக்கள் கோரிக்கை
/
மாலை நேரம் கூடுதல் பஸ் இயக்க மக்கள் கோரிக்கை
ADDED : ஏப் 12, 2024 04:25 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் இருந்து ராமநாதபுரத்திற்கு மாலை நேரத்தில் கூடுதல் பஸ் இயக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
முதுகுளத்துார், கமுதி, கடலாடியில் தாலுகா அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள்,மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொதுப்பணித்துறை அலுவலகம், நீதிமன்றம் உட்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் ராமநாதபுரத்தில் இருந்து ஏராளமானோர் பணிபுரிகின்றனர்.
வேலை முடிந்து மாலை வீட்டிற்கு செல்வதற்காக முதுகுளத்துாரில்காத்திருந்து பஸ்சில் செல்கின்றனர். முதுகுளத்துாரில் இருந்து தேரிருவேலி, உத்தரகோசமங்கை வழியாக ராமநாதபுரத்திற்கு மாலை 4:30 மணிக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. பின் மாலை 6:00 மணி வரை பஸ்சில்லாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.
ஏனாதி சுரேஷ்காந்தி கூறியதாவது:
முதுகுளத்துார், கடலாடி, கமுதியில் உள்ள அரசு, தனியார் அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் வேலை முடிந்து மாலை நேரங்களில் வீடு திரும்பும் போது காத்திருந்து செல்கின்றனர்.
முதுகுளத்துாரில் இருந்து ராமநாதபுரத்திற்கு மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை அரசு பஸ்கள் இல்லாததால்1:30 மணி நேரம் காத்திருந்து செல்லும் அவலநிலை உள்ளது.
அதற்கு பின் ராமநாதபுரம் செல்வதால் தாமதம் ஏற்படுகிறது. இதேபோல் மாணவர்களும் சிரமப்படுகின்றனர். மாணவர்கள், பணியாளர் நலன் கருதி மாலை நேரங்களில் முதுகுளத்துாரில் இருந்து உத்தரகோசமங்கை வழியாக ராமநாதபுரத்திற்கு கூடுதல் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

