sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நவநீத கிருஷ்ணனாக முத்துபல்லக்கில் பெருமாள்

/

நவநீத கிருஷ்ணனாக முத்துபல்லக்கில் பெருமாள்

நவநீத கிருஷ்ணனாக முத்துபல்லக்கில் பெருமாள்

நவநீத கிருஷ்ணனாக முத்துபல்லக்கில் பெருமாள்


ADDED : ஜூலை 21, 2024 04:41 AM

Google News

ADDED : ஜூலை 21, 2024 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்று காலை ஆடி தேரோட்டம்

பரமக்குடி: -பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் முத்து பல்லக்கில் நவநீத கிருஷ்ணனாக பெருமாள் வீதி உலா வந்தார்.

பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவின் 8ம் நாள் விழா நடந்தது.

காலை 9:00 மணிக்கு பெருமாள் முத்துப் பல்லக்கில் தவழும் கண்ணன் திருக்கோலத்தில் நவநீத கிருஷ்ணனாக அலங்காரம் ஆகினார்.

அப்போது மயில் இறகு கொண்டையில் சூடி, வெள்ளி குடம் ஏந்தி, ஆண்டாள் கிளி மாலையை அணிந்து உலா வந்தார்.

தொடர்ந்து காலை 11:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக மதியம் 3:00 மணிக்கு வைகை ஆற்றில் மண்டகப்படியை அடைந்தார்.

அங்கு இரவு சிறப்பு தீபாராதனைக்கு பின் 11:00 மணிக்கு மேல் குதிரை வாகனத்தில் கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகினார்.

பின்னர் இரவு அங்கிருந்து புறப்பாடாகி அதிகாலை திருக்கோயிலை அடைந்தார்.

மேலும் இன்று காலை 10:00 மணிக்கு ஆடித் தேரில் ரத வீதிகளில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வலம் வருகிறார்.






      Dinamalar
      Follow us