/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நிவாரணம் கேட்டு முதல்வருக்கு மனு
/
நிவாரணம் கேட்டு முதல்வருக்கு மனு
ADDED : ஜூன் 25, 2024 10:58 PM
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் மேகலா. அறந்தாங்கி பரமேஸ்வரனுடன் திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முதல் கணவரை பிரிந்து 2-வதாக பரமக்குடியை சேர்ந்த மணிகண்டனை திருமணம் செய்துள்ளார்.
போதையில் மணிகண்டன் அடிக்கடி தகராறு செய்ததால் அவரையும் பிரிந்து வாழ்ந்தார். இந்நிலையில் ஜூன் 23ல் மது போதையில் மேகலாவை மணிகண்டன் கத்தியால் குத்தி கொலை செய்தார். மணிகண்டன் கைது செய்யப்பட்ட நிலையில் உறவினர்கள், அனைத்து கட்சி, வியாபாரிகள் சங்கம் மற்றும் சவுராஷ்டிரா சபை நிர்வாகிகள் நிவாரணம் கேட்டு நேற்று முன்தினம் மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம், படிப்பு செலவு மற்றும் அவர்களை அரசு தத்தெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். பின் உடலை பெற்று அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் இந்திய கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் பெருமாள் போதை கணவரால் உயிரிழந்த மேகலாவின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளார்.