/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடி தர்காவில் யாத்திரீகர்களின் வசதிக்காக மணல் குவியல் கோடை வெயிலை சமாளிக்க தற்காலிக நிழற் பந்தல்
/
ஏர்வாடி தர்காவில் யாத்திரீகர்களின் வசதிக்காக மணல் குவியல் கோடை வெயிலை சமாளிக்க தற்காலிக நிழற் பந்தல்
ஏர்வாடி தர்காவில் யாத்திரீகர்களின் வசதிக்காக மணல் குவியல் கோடை வெயிலை சமாளிக்க தற்காலிக நிழற் பந்தல்
ஏர்வாடி தர்காவில் யாத்திரீகர்களின் வசதிக்காக மணல் குவியல் கோடை வெயிலை சமாளிக்க தற்காலிக நிழற் பந்தல்
ADDED : மே 12, 2024 01:36 AM

கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் பாதுஷா நாயகம் தர்கா அமைந்துள்ளது.
இங்கு நடக்கக்கூடிய மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா பிரசித்தி பெற்றதாகும்.
சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு கடந்த 20 நாட்களுக்கு முன்பாக 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏர்வாடி தர்கா வளாகத்தினை சுற்றிலும்
மணல் குவியல் கொட்டப்பட்டு பரப்பப்பட்டது.
சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிக்க 20க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி தண்ணீர் தெளிப்பான் இயங்கி வருகிறது. 7 ஆயிரம் சதுர அடியில் தற்காலிக நிழற்பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பொதுமக்கள் மற்றும் யாத்திரீகர்கள் தர்காவினுள் வந்து செல்வதற்கு வசதியாக வெள்ளை மணற்பரப்பின் மீது விரிப்பு விரிக்கப்பட்டுள்ளது.
தர்கா வளாகத்தை சுற்றிலும் 50 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் கூறியதாவது: ஏர்வாடி தர்காவிற்கு நாள்தோறும் ஏராளமானோர் பிரார்த்தனை செய்வதற்காக வந்து செல்கின்றனர்.
வியாழன், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் இரவு நேரங்களில் யாத்திரீகர்கள் அங்குள்ள வெள்ளை மணற்பரப்பில் படுத்து உறங்கி விட்டு அதிகாலையில் பிரார்த்தனை செய்துவிட்டு செல்வது வழக்கமான நிகழ்வாகும்.
கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆலோசனையின் பேரில், தர்கா வளாகம் முழுவதும் வெள்ளை நிற மணல் குவியல்கள் கொட்டப்பட்டு உள்ளது.
பொதுவாக இங்கு இரவு நேரங்களில் தர்கா வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர் மணற்பரப்பில் உறங்கி செல்வது அவர்களின் ஆன்மீக சிகிச்சைக்கு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தூய்மையான தர்கா வளாகமாக பராமரிக்கப்பட்டு கை கழுவுமிடம், குப்பை போடும் தொட்டிகள் மற்றும் 24 மணி நேரமும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
சந்தனக்கூடு திருவிழாவிற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான யாத்திரீகர்கள் வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.
மாலை 6:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை தினமும் சந்தனக்கூடு விழா வரை ஷரீப் தர்கா மண்டபத்தில் மவுலீது (புகழ் மாலை) ஓதும் நிகழ்ச்சி நடந்து வருகிறது என்றனர்.