/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
/
போலீசாரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
ADDED : மார் 22, 2024 04:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தமிழகத்தில் ஏப்.19ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ராமநாதபுரம் லோக்சபா திருவாடானை சட்டசபை தொகுதியில் தேர்தல் பணிகள் நடக்கிறது.
தேர்தலை முன்னிட்டு மக்கள் அச்சமின்றி ஓட்டுப்பதிவு செய்வதை உறுதி செய்யும் வகையில் மத்திய ஆயுதபடை போலீசார் மற்றும் திருவாடானை சப்-டிவிசன் போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. தொண்டியில் பழைய பஸ்ஸ்டாண்ட் முதல் புது பஸ்ஸ்டாண்ட் வரையிலும், திருவாடானையில் பஸ்ஸ்டாண்டிலிருந்து தாலுகா அலுவலகம் வரை நடந்தது.
டி.எஸ்.பி. நிரேஷ், இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி பங்கேற்றனர்.

