/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூலிப்படை வாலிபரிடம் போலீசார் விசாரணை
/
கூலிப்படை வாலிபரிடம் போலீசார் விசாரணை
ADDED : ஜூலை 13, 2024 04:57 AM
திருவாடானை, : கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கூலிபடையை சேர்ந்த வாலிபரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.
திருவாடானை அருகே கொடிக்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் 42. இவருடைய மனைவி ஆர்த்தி 35. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த இளையராஜா 35, க்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.
இதை ஸ்ரீகாந்த் கண்டித்தார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை ஆர்த்தி கூலிபடையை ஏவி கொலை செய்தார்.
இக்கொலை வழக்கில் சம்பந்தபட்ட கூலிப்படையை சேர்ந்த சிவகங்கை ஆசைமுத்துவை 24, சில நாட்களுக்கு முன் திருவாடானை எஸ்.ஐ., கோவிந்தன் கைது செய்தார்.
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ஆசைமுத்துவை நேற்று முன்தினம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். நேற்று சிறையில் மீண்டும் அடைத்தனர்.