ADDED : ஆக 01, 2024 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அஞ்சல் துறை சார்பில் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் அஞ்சல் சேவை விளக்கக்கூட்டம் நடந்தது.
ராமநாதபுரம் தலைமை அஞ்சல் அதிகாரி சேக்தாவூத் தலைமை வகித்தார்.வணிக மேலாளர் பாலு, ஆயுள் காப்பீடு வளர்ச்சி அதிகாரி அகமது முன்னிலை வகித்தனர். அஞ்சல் துறையில் அரசின் திட்டங்கள், அஞ்சலக சேமிப்புத் திட்டம், காப்பீடு, இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி சேவை, துரித அஞ்சல் சேவை உள்ளிட்ட சேவைகள் குறித்து விளக்கப்பட்டது.
பள்ளி தாளாளர் டாக்டர் பாபு அப்துல்லா, தலைமை ஆசிரியர் காஜா, உதவி தலைமை ஆசிரியர் கருணாநிதி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் தாமரைக்கண்ணன் நன்றி கூறினார்.