/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் பள்ளம்: வாகன ஓட்டிகள் சிரமம்
/
தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் பள்ளம்: வாகன ஓட்டிகள் சிரமம்
தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் பள்ளம்: வாகன ஓட்டிகள் சிரமம்
தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டில் பள்ளம்: வாகன ஓட்டிகள் சிரமம்
ADDED : ஜூன் 25, 2024 11:07 PM
தேவிபட்டினம் : தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்ட் தரைதளத்தில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளத்தால் பஸ் டிரைவர்கள், இதர வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்திக்கின்றனர்.
திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையும், கிழக்கு கடற்கரை சாலையும் தேவிப்பட்டினத்தில் இணைகின்றன. இதனால், தேவிபட்டினம் பகுதியில் இருந்து அதிகளவில் பஸ் மற்றும் வாகன போக்குவரத்து உள்ளன. முக்கியத்துவம் வாய்ந்த தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்டிற்கு இரண்டு முக்கிய சாலைகளில் இருந்தும் வரும் பஸ்கள் தேவிபட்டினம் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு வந்து செல்கின்றன.
இந்த பஸ் ஸ்டாண்ட் தரைதளத்தில் நீண்ட நாட்களாக பள்ளங்கள் ஏற்பட்டு பில்லர் கம்பிகள் வெளியில் தெரியும் நிலையில் உள்ளன. இதனால் பஸ் டிரைவர்கள் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை கடப்பதில் சிரமத்தை சந்திக்கின்றனர்.
மேலும் பஸ்சுக்காக காத்திருந்து பஸ்சில் ஏறச் செல்லும் பயணிகளும், ரோட்டில் உள்ள பள்ளத்தால் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சேதமடைந்த பஸ் ஸ்டாண்ட் தரைதளத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.