/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோடு நடுவில் பள்ளம்; விபத்து அபாயம்
/
ரோடு நடுவில் பள்ளம்; விபத்து அபாயம்
ADDED : மே 10, 2024 11:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். புதுக்கோட்டை ரோட்டில் இருந்து 3 கி.மீ.,ல் குண்டுகுளம் கிராமம் உள்ளது. குண்டுகுளம் அருகே சிறுபாலத்தின் நடுவில் சாலையில் பள்ளம் ஏற்பட்டது.
இவ்வழியே செல்லும் கிராம மக்கள் அச்சப்படுகின்றனர். அது மட்டும் இல்லாமல் சாலை நடுவில் பள்ளம் இருப்பது தெரிவதற்காக கம்புகள் வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இவ்வழியில் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட்டு செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சாலையின் நடுவில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.