/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடைபாதையில் பள்ளம்; நோயாளிகள் அவதி
/
நடைபாதையில் பள்ளம்; நோயாளிகள் அவதி
ADDED : ஜூலை 23, 2024 11:20 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சித்த மருத்தவப்பிரிவு புதிய கட்டடம் அமைந்துள்ள பகுதியில் நடை பாதையில் பாதாள சாக்கடை மூடி உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளதால் விபத்து அபாயம் உள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தற்போதைய சித்த மருத்தவப்பிரிவுக்கு அடுத்து உள்ள புதிய கட்டடம், நோயாளிகளின் உதவியாளர்கள் இரவு நேரத்தில் தங்கியிருக்கும் காத்திருப்போர் அறை, நர்சிங் பயிற்சி பள்ளி மாணவியர் விடுதி என அனைத்தும் இந்தப்பகுதியில் உள்ளன.
இந்தப்பகுதியில் மக்கள் நடந்து செல்லும் பாதையில் பாதாள சாக்கடை கான்கிரீட்டால் மூடப்பட்டிருந்தது.தற்போது சேதமடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் கழிவு நீர் நிறைந்துள்ளது. இந்தப்பகுதியில் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கழிவு நீர் திறந்த வெளியில் இருப்பதால் தொற்று நோய்கள் பரப்பும் நிலையும் உள்ளது. அரசு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.