/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டம்; பதிவு செய்ய முடியாமல் தவிப்பு
/
பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டம்; பதிவு செய்ய முடியாமல் தவிப்பு
பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டம்; பதிவு செய்ய முடியாமல் தவிப்பு
பிரதமர் மருத்துவ காப்பீடு திட்டம்; பதிவு செய்ய முடியாமல் தவிப்பு
ADDED : ஏப் 26, 2024 12:54 AM
திருவாடானை : பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அடையாள அட்டை வழங்கும் முகாமில் ரேஷன் கார்டு குறியீடு குழப்பத்தால் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் மக்கள் திரும்பிச் சென்றனர்.
பிரதமரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் உயிர் காக்கும் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.
இத் திட்டத்திற்கு மக்களிடையே வரவேற்பு இருப்பதால் லோக்சபா தேர்தலுக்கு முன் மத்தியஅரசின் இத் திட்டம் குறித்து மக்களிடம் எடுத்துச் செல்வதில் பா.ஜ.,வினர் முனைப்பு காட்டினர்.
இப்பணியில் ஈடுபட்டுள்ள பொது சேவை ஊழியர்கள் அலைபேசி வழியாக மக்களின் ஆதார் எண் உதவியுடன் காப்பீடு அட்டையை உறுதி செய்து அதனை பிரின்ட் அவுட் எடுத்து கொடுத்து வருகின்றனர். நேற்று திருவாடானை ஊராட்சி அலுவலகத்தில் இதற்கான முகாம் நடந்தது.
ஆனால் ரேஷன் கார்டில் குறியீட்டை வைத்து பதிவு செய்யும் போது விடுபடுவதால் நிறைய பேர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஊழியர்கள் கூறுகையில், தமிழகத்தில் பி.எச்.எச்., என்.பி.எச்.எச்., உள்ளிட்ட 5 வகை ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கார்டு அனைத்தும் ஒரே வகையாக இருந்தாலும், அதில் இருக்கும் குறியீடுகளை வைத்தே எந்த வகை என அறிந்து கொள்ள முடியும்.
இதில் பி.எச்.எச்., கார்டை வைத்து காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யலாம். ஆனால் நேற்று ஆன்லைனில் பார்த்த போது நிறைய பேருக்கு லிஸ்ட்டில் பதிவாகாமல் விடுபட்டுள்ளது. விரைவில் அதற்கான லிஸ்ட் வந்தவுடன் அனைவருக்கும் பதிவு செய்யப்படும் என்றனர்.
இதனால் முகாமிற்கு சென்ற நிறைய பேர் பதிவு செய்ய முடியாமல்ஏமாற்றமடைந்தனர். மக்கள் கூறுகையில், பிரதமரின் காப்பீடு திட்டம் மிகவும் பயனுள்ள திட்டம்.
ஆகவே அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெறும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

