/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வங்கி அருகே திறக்கப்பட்ட தனியார் மதுபான கூடம்: பொதுமக்கள் அச்சம்
/
வங்கி அருகே திறக்கப்பட்ட தனியார் மதுபான கூடம்: பொதுமக்கள் அச்சம்
வங்கி அருகே திறக்கப்பட்ட தனியார் மதுபான கூடம்: பொதுமக்கள் அச்சம்
வங்கி அருகே திறக்கப்பட்ட தனியார் மதுபான கூடம்: பொதுமக்கள் அச்சம்
ADDED : செப் 10, 2024 11:52 PM
கமுதி : கமுதியில் பாரத ஸ்டேட் பாங்க் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள தனியார் ஏசி மதுபான கூடத்தால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
கமுதி பஸ் ஸ்டாண்ட் அருகே பாரத ஸ்டேட் பாங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு கமுதி அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர்.
தினந்தோறும் பணம் எடுக்கவும், செலுத்தவும், நகை அடகு வைக்கவும், பள்ளி மாணவர்களும் உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காகபலர் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாங்க் அருகே முதுவை ஹெல்த் அண்டு ரெக்ரேஷன் கிளப் என்ற பெயரில் தனியார் மதுபானக் கூடம் திறக்கப்பட்டது.
இங்கு வரும் மதுபான பிரியர்கள் ரோட்டோரத்தில் ஆங்காங்கே டூவீலர் நிறுத்திவிட்டு செல்கின்றனர். வங்கி வரும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் வந்து செல்கின்றனர்.இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே வங்கிக்கு வரும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.
விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் குருசாமி கூறியதாவது:கமுதியில் வங்கி அருகே தனியார் ஏசி மதுபான கூடத்திற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது கண்டனத்திற்குரியது.இதனால் வங்கிக்கு வரும் விவசாயிகள், பெண்கள் அச்சத்துடன் செல்கின்றனர். மதுபான பிரியர்களால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மதுபான கூடத்தை அகற்றி மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகள் பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.