ADDED : ஜூலை 24, 2026 05:52 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடி தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஆடி 2ம் வெள்ளியில் ஊஞ்சல் சேவை நடந்தது. கோயிலில் புஷ்கலா தேவி தனி சன்னதியில் உள்ளார். நேற்று ஆடி வெள்ளி நாளில் அன்னபூரணி அலங்காரத்தில் ஊஞ்சல் சேவையில் பக்தர்கள் தரிசித்தனர். இதே போல் முத்தாலம்மன் கோயிலில் மூலவருக்கு பாலபிஷேகம் நடந்தது.
அனைத்து அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் கூழ் ஊற்றி வழிபாடு நடத்தினர். தொடர்ந்து 2வது வெள்ளிக்கிழமையும் ஏராளமான பக்தர்கள் பரமக்குடியில் இருந்து நயினார்கோவிலுக்கு பாதயாத்திரை சென்று நாகநாதரை வழிபட்டனர்.
