/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானையில் மழை; விவசாயிகள் மிகிழ்ச்சி
/
திருவாடானையில் மழை; விவசாயிகள் மிகிழ்ச்சி
ADDED : மே 20, 2024 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் பெய்து வரும் தொடர் மழை, கோடை உழவுக்கு ஏற்றதாக அமைந்துள்ளது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
திருவாடானை, தொண்டியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
சமீப நாட்களாக மழை பெய்கிறது. இது கோடை உழவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது.
இந்த மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். மேய்ச்சல் நிலங்களில் புல் முளைப்பதால் கால்நடைகளுக்கு தீவனம் கிடைக்கும்.
இதனால் கால்நடை தீவனச் செலவும் குறையும். மழை தொடர்ந்தால் ஆடி 18ல் விதைப்பு பணிகளை துவக்கலாம் என்றனர்.

