/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொழிலதிபரின் ரூ.27 லட்சம் ராமநாதபுரம் போலீஸ் மீட்பு
/
தொழிலதிபரின் ரூ.27 லட்சம் ராமநாதபுரம் போலீஸ் மீட்பு
தொழிலதிபரின் ரூ.27 லட்சம் ராமநாதபுரம் போலீஸ் மீட்பு
தொழிலதிபரின் ரூ.27 லட்சம் ராமநாதபுரம் போலீஸ் மீட்பு
ADDED : ஜூலை 04, 2024 02:16 AM
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் மெகராஜ், 41. ரியல் எஸ்டேட், ஆன்லைனில் பங்கு வர்த்தக தொழில் செய்கிறார். இவரது 'வாட்ஸாப்' எண்ணில் பேசிய மர்ம நபர், பிரபலமான பங்கு வர்த்தக நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என தெரிவித்தார். அதை உண்மை என நம்பிய மெகராஜ், அந்த நபர் அனுப்பிய வாட்ஸாப் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உறுப்பினராக, 20,000 ரூபாய் செலுத்தி சேர்ந்தார்.
மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு பல தவணைகளில் 30 லட்சம் ரூபாயை அனுப்பினார். அந்த செயலியில் பங்கு வர்த்தகத்தில் லாபம் அதிகமாக சேர்ந்ததை அறிந்த மெகராஜ், அந்த பணத்தை எடுக்க முடிவு செய்தார். அப்போது, முழுப்பணத்தையும் எடுக்க, பெரிய தொகையை கட்ட வேண்டும் என அந்த மர்ம நபர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சுதாரித்தவர், மோசடி கும்பல் குறித்து போலீசில் புகார் செய்தார். எஸ்.பி., சந்தீஷ் உத்தரவின்படி, ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீசார் உடனடியாக மர்ம நபர்களின் வங்கி கணக்கை முடக்கினர். அதில், 27 லட்சம் ரூபாய் இருந்தது. மெகராஜ் அனுப்பிய அந்த பணத்தை மீட்டனர்.