/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் உணவகம் இல்லாமல் தவிப்பு
/
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் உணவகம் இல்லாமல் தவிப்பு
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் உணவகம் இல்லாமல் தவிப்பு
ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் உணவகம் இல்லாமல் தவிப்பு
ADDED : செப் 17, 2024 04:11 AM
ராமநாதபுரம், : ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு உணவகங்கள் இல்லாததால் தவிக்கின்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக மதுரை, திருச்சி, சென்னை, கோவை, கன்னியாகுமரி, புவனேஸ்வர், திருப்பதி, செகந்திராபாத், ஒகா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் தினமும் ஏராளமானோர் ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் இருந்து பயணிக்கின்றனர்.
ரயிலில் பெரும்பாலான பயணிகள் மதிய நேரத்திலும், இரவு நேரத்திலும் பயணிக்கின்றனர். இவர்களுக்கு ரயில் நிலையத்தில் உணவகங்கள் இல்லாத நிலையில் தவிக்கின்றனர். ரயில் நிலையத்திற்கு வெளியில் சென்று உணவகங்களில் உணவு வாங்கி செல்லும் நிலை உள்ளது.
ரயிலில் பயணிக்கும் பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி வெளியில் செல்ல முடியாத நிலையில் பட்டினியால் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. ரயில்வே நிர்வாகம் ரயில் நிலையத்தில் உணவகங்கள் அமைத்து பயணிகளின் தவிப்பை வேண்டும்.