/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் உள்வாங்கியது
/
ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் உள்வாங்கியது
ADDED : ஜூலை 06, 2024 06:47 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த கடல் நேற்று 100 மீ., உள்வாங்கியது. இதனால், நீராட வந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த கடல் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு 100 மீ., உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பவளப்பாறைகள் வெளியில் தெரிந்தது. மேலும் சிறிய மீன் குஞ்சுகள், கடல் சிற்பிகள் சிறுகுழியில் தேங்கி கிடந்த கடல்நீரில் தத்தளித்து கொண்டிருந்தன. காலை 6:00 மணிக்கு புனித நீராட வந்த பக்தர்கள் கடல் உள்வாங்கி இருப்பதை கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.
பின் மதியம் 12:00 மணிக்கு கடல் நீர்மட்டம் உயர்ந்ததும் அக்னி தீர்த்த கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போது தென்மேற்கு பருவக்காற்று வீசும் சீசனில் கடல்நீர் உள்வாங்குவதும், பின் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமாகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.