/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆக.29 வரை சிறைக்காவல்
/
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆக.29 வரை சிறைக்காவல்
ADDED : ஆக 21, 2024 01:31 AM
ராமேஸ்வரம்:-இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேருக்கு ஆக., 29 வரை காவலை நீட்டித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 22ல் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் 3 விசைப்படகுகளையும், அதில் இருந்த 9 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் நீதிமன்ற வாய்தா நாளான நேற்று மீனவர்கள் 9 பேரையும் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இவர்களின் சிறைக்காவலை ஆக.29 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து 27 நாட்கள் சிறையில் உள்ள மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என அவர்களின் குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில் சிறைக்காவல் நீட்டிப்பு சோகத்தை ஏற்படுத்தியது.