/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர் 'ஸ்டிரைக்'
/
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர் 'ஸ்டிரைக்'
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர் 'ஸ்டிரைக்'
இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர் 'ஸ்டிரைக்'
ADDED : ஆக 02, 2024 07:59 PM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் சகாயம் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், இலங்கை கடற்படையினர் கப்பலை கொண்டு மோதி மூழ்கடித்த படகில் உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடலை மீனவர் குடும்பத்திடம் ஒப்படைக்க வலியுறுத்தினர்.
காணாமல் போன மீனவர் ராமச்சந்திரனை கண்டுபிடிக்கவும், இலங்கை கடற்படையினர் பிடித்த மீனவர்கள் மூக்கையா, முத்துமுனியாண்டி மீது எவ்வித வழக்கும் இன்றி தமிழகத்திற்கு அனுப்பி வைக்க இலங்கை அரசை மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தவும் கோரிக்கை விடப்பட்டது.
மலைச்சாமி குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி உத்தரவிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ராமச்சந்திரனை கண்டுபிடிக்காவிடில் 10 நாட்களுக்குள் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும், இலங்கை சிறையில் உள்ள 87 தமிழக மீனவர்களை விடுவிக்கவும், மூழ்கிய படகின் உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றினர்.
மேலும், இலங்கை கடற்படையினரின் தாக்குதலை கண்டித்து நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் துவக்கினர்.