/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷன் பொருள்:முன்னுரிமை கேட்கும் மாற்றுத்திறனாளிகள்
/
ரேஷன் பொருள்:முன்னுரிமை கேட்கும் மாற்றுத்திறனாளிகள்
ரேஷன் பொருள்:முன்னுரிமை கேட்கும் மாற்றுத்திறனாளிகள்
ரேஷன் பொருள்:முன்னுரிமை கேட்கும் மாற்றுத்திறனாளிகள்
ADDED : மார் 15, 2025 05:12 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ரேஷன் பொருட்கள் வழங்க வலியுறுத்தி வட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளித்தனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் சார்பில் முதுகுளத்துார் வட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்துவிடம் மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
முதுகுளத்துார் தாலுகாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பொருட்கள் வழங்கவும், தவழும் , கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாவலர் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கான கடிதம் வழங்கவும், மிகவும் வறுமையில் உள்ள 86 பேருக்கு அந்தியோதயா அன்ன யோஜனா ரேஷன் கார்டாக மாற்றி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தாலுகா செயலாளர் ராஜேஷ், துணைத்தலைவர் முத்துகண்ணன், தாலுகா பொருளாளர் ஆரோக்கிய பிரபாகர், நிர்வாகிகள் உடன் இருந்தனர்.