/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எம்.பி.,யாக இருக்கும் போதும் தேடல் போட்டியிடும் போதும் தேடுகின்றனர் ஆர்.பி.உதயகுமார் கிண்டல்

ADDED : மார் 25, 2024 06:10 AM
-ராமநாதபுரம், :ராமநாதபுரம் எம்.பி., எங்கே இருக்கிறார் என்று அப்போதும் மக்கள் தேடினர். போட்டியிடும் போதும் தேடுகின்றனர் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:
நாங்கள் எங்கள் கட்சி வேட்பாளர் ஜெயபெருமாள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் அறந்தாங்கி உட்பட தொகுதிகளுக்கு சென்று வருகிறோம். ஒரு இடத்தில் கூட தி.மு.க., தொண்டர்களை காணவில்லை. தி.மு.க.,கட்சியினரே கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தோழமை கட்சிகள் கூட தங்களிடம் கருத்து கேட்கவில்லை என்கின்றனர். இங்கு எம்.பி.,யாக இருந்த நவாஸ்கனி தொகுதி மக்களிடம் தலைகாட்டாதவர். எம்.பி.,யாக இருந்தவரை மக்கள் தேடி வந்தனர். ஆளும் கட்சி கூட்டணி எம்.பி., என்பதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தற்போது மீண்டும் போட்டியிடும் போது கூட எம்.பி., யை மக்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர் என்றார்.