/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கிராம நுாலகங்களில் வாசிப்பில் ஆர்வம் காட்டாத வாசகர்கள்; பெயரளவில் செயல்படுகிறது

ADDED : ஜூன் 14, 2024 10:26 PM
திருப்புல்லாணி : ராமநாதபுரம் மாவட்ட நுாலகத் துறை சார்பில் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கிராமப்புற கிளை நுாலகங்கள் செயல்படுகிறது.
திருப்புல்லாணி, ரெகுநாதபுரம், உத்தரகோசமங்கை, சிக்கல், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் கிளை நுாலகம் உள்ளது.
பெரும்பாலான அரசு கிளை நுாலகங்களில் வெள்ளிக்கிழமை விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர இதர நேரங்களில் வாசகர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
வாசகர்கள் கூறுகையில், பெரும்பாலும் நாளிதழ்கள், வார இதழ்கள் மற்றும் மாத இதழ்களை படிப்பதற்கு நுாலகம் வருகிறோம்.
அலைபேசி, யூடியூப், வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றின் ஆதிக்கத்தால் கடந்த ஐந்தாண்டுகளில் பெருவாரியான வாசகர்கள் நுாலகத்திற்கு வருவதில்லை.
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் வாடகை கட்டடத்தில் அரசு கிளை நுாலகம் இயங்கி வருகிறது.
போட்டித் தேர்வுகள் உள்ளிட்டவற்றிற்கு படிப்பதற்கு வெகுவாக வாசகர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கட்சிகளின் ஆட்சிக்கு தகுந்தாற் போல் நாளிதழ்களை வாங்குகின்றனர். தினமலர் நாளிதழ் கிளை நுாலகங்களில் வாங்குவதில்லை.
எனவே பெயரளவில் செயல்படும் கிளை நுாலகங்களில் வாசகர்களை கவரும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஏற்படுத்தினால் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிகரிக்கும் என்றனர்.