/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வடிகால் வசதி ஏற்படுத்த கோரிக்கை
/
வடிகால் வசதி ஏற்படுத்த கோரிக்கை
ADDED : ஜூன் 16, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கல்: சிக்கல் ஊராட்சி வடக்கு தெருவில் கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததால் தெருக்களில் தேங்கியுள்ளது.
சிக்கல் ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இங்குள்ள பெரும்பாலான தெருக்களில் வடிகால் வசதி ஏற்படுத்தவில்லை. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக தெருக்களில் விடப்படுவதால் கழிவுநீர் குளம் போல் தேங்கி நோய் பரப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பகலிலும், இரவிலும் கொசுப் பண்ணை உருவாகி கடிக்கிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் கழிவுநீர் வடிகால் வசதி இல்லாத தெருக்களை கண்டறிந்து கழிவுநீர் முறையாக செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.