/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டிரான்ஸ்பார்மரை சுற்றி தடுப்பு அமைக்க கோரிக்கை
/
டிரான்ஸ்பார்மரை சுற்றி தடுப்பு அமைக்க கோரிக்கை
ADDED : செப் 01, 2024 11:40 PM
திருவாடானை: திருவாடானை, தொண்டியில் அமைந்துள்ள டிரான்பார்மர்களை சுற்றிலும் தடுப்பு அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் உள்ள கிராமங்களில் கூடுதல், குறைந்த மின்னழுத்தம் கண்டறியபட்டு, மின் விநியோகம் சீராக வழங்கும் வகையில் சில மாதங்களாக புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கும் பணிகள் நடக்கிறது. திருவாடானை, தொண்டியில் 63 கே.வி.ஏ.,100 கே.வி.ஏ.,டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கபட்டுள்ளன.
இந்நிலையில் சில டிரான்ஸ்பார்மர்கள் குடியிருப்பு பகுதிகளிலும் உள்ளன. அப்பகுதியில் குழந்தைகள் ரோட்டில் விளையாடுகின்றனர். குடியிருப்பு அருகே இருப்பதால் குழந்தைகளை வெளியில் அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் காட்டுகின்றனர். சில இடங்களில் வீடுகளிலிருந்து 30 முதல் 40 மீட்டர் இடைவெளியில் டிரான்ஸ்பார்மர்கள் அமைந்துள்ளது. எனவே சுற்றிலும் தடுப்புகள் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.