/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கட்டி முடித்து திறக்கப்படாமல் உள்ள ஆர்.ஐ., அலுவலகம்
/
கட்டி முடித்து திறக்கப்படாமல் உள்ள ஆர்.ஐ., அலுவலகம்
கட்டி முடித்து திறக்கப்படாமல் உள்ள ஆர்.ஐ., அலுவலகம்
கட்டி முடித்து திறக்கப்படாமல் உள்ள ஆர்.ஐ., அலுவலகம்
ADDED : ஏப் 23, 2024 10:59 PM

முதுகுளத்துார்- முதுகுளத்துாரில் வடக்கு, தெற்கு உட்பட்ட ஆர்.ஐ.,அலுவலகம் கட்டி முடித்து திறக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது.
முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட முதுகுளத்துார் வடக்கு, தெற்கு, காக்கூர், தேரிருவேலி, மேலக்கொடுமலுார், கீழத்துாவல் உள்வட்டம் வருவாய் கிராமங்களுக்கு உள்ளடக்கியது. ஆர்.ஐ.,க்கு என்று தனி அலுவலகம் இல்லாமல் தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
இதனால் கிராம மக்கள் அவரை தேடி அலையும் அவல நிலை உள்ளது. அந்தந்த வருவாய் கிராமங்களான காக்கூர், தேரிருவேலி கிராமத்தில் தினமலர் செய்தி எதிரொலியாக புதிதாக ஆர்.ஐ., அலுவலக கட்டடம் திறக்கப்பட்டது.
முதுகுளத்துார்- - பரமக்குடி ரோட்டில் போலீஸ் குடியிருப்பு அருகே கடந்த ஓராண்டுக்கு முன்பு புதிதாக முதுகுளத்தார் வடக்கு, தெற்கு என்று தனித்தனியாக ஆர்.ஐ., அலுவலகம், குடியிருப்பு கட்டடம் கட்டும் பணி துவங்கி நடந்து முடிந்தது.
தற்போது ஆர்.ஐ., அலுவலகம் திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

