/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு கோடவுனில் ரூ.90 ஆயிரம் பாட நோட்டுகள் திருட்டு
/
அரசு கோடவுனில் ரூ.90 ஆயிரம் பாட நோட்டுகள் திருட்டு
அரசு கோடவுனில் ரூ.90 ஆயிரம் பாட நோட்டுகள் திருட்டு
அரசு கோடவுனில் ரூ.90 ஆயிரம் பாட நோட்டுகள் திருட்டு
ADDED : மே 08, 2024 01:15 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் சக்கரக்கோட்டை உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு நோட்டு புத்தக கோடவுன் கதவை உடைத்து ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள கிராப் நோட்டுக்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இப்பள்ளி வளாகத்தில் 128 பள்ளிகளுக்கு வழங்க நோட்டு புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ள கோடவுன் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு இங்கு பின் பக்க கதவை உடைத்து ஒரு பெட்டியில் தலா 180 கிராப் நோட்டுகள் உள்ள 12 பெட்டிகளை ஆட்டோவில் வந்த மூன்று மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.90 ஆயிரம்.
இது குறித்து மாவட்ட கல்விஅலுவலர் சுதாகர், கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். திருடியவர்களை போலீசார் தேடுகின்றனர்.