/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மோர்ப்பண்ணையில் பாய்மர படகு போட்டி
/
மோர்ப்பண்ணையில் பாய்மர படகு போட்டி
ADDED : ஜூன் 22, 2024 01:58 AM

ஆர்.எஸ்.மங்கலம்:ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணையில் நடந்த பாய்மரப் படகுப் போட்டியில் ஒன்றை ஒன்று முந்தி சென்ற படகுகளை கடற்கரையில் கூடியிருந்த மக்கள் கண்டு ரசித்தனர்.
மோர்ப்பண்ணை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று பாய்மரப் படகுப்போட்டி நடந்தது. மாவட்ட அளவில் 24 படகுகள் கலந்து கொண்டன. 7 கடல் மைல் தொலைவு எல்லை நிர்ணயிக்கப்பட்டது. தலா ஆறு வீரர்கள் பங்கேற்று படகை செலுத்தினர்.
கிராம தலைவர் ராஜதுரை கொடியசைத்து துவக்கி வைத்தார். படகுகள் ஒன்றை ஒன்று முந்தியவாறு காற்றின் திசையில் கடல் நீரை கிழித்துக் கொண்டு சென்றன.
இந்நிகழ்வை கடற்கரையில் கூடியிருந்த பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். வெற்றி பெற்ற படகுகளுக்கு முதல் பரிசாக ரூ.40 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.30 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 20 ஆயிரம், நான்காம் பரிசு ரூ.15 ஆயிரம், ஐந்தாம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. போட்டி ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.