/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோடை வெயில் தாக்கம் உப்பு உற்பத்தி மும்முரம்
/
கோடை வெயில் தாக்கம் உப்பு உற்பத்தி மும்முரம்
ADDED : ஏப் 28, 2024 05:41 AM

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே ஆனைகுடி, காஞ்சிரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உப்பளங்கள் உள்ளன. கோடைவெயிலின் தாக்கம்அதிகரித்துள்ளதால் தற்போது உப்பு உற்பத்தி மும்முரமாக நடக்கிறது.
கடந்த டிச., ஜன., மாதம் பெய்த மழைக்குப்பிறகு உப்பளங்களில் பாத்திகள் சீரமைக்கப்பட்டு ஆழ்துளை கிணறுகளின் மூலம் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. கோடை காலம் துவங்கியதில் இருந்து தீவிரமாக உப்பு உற்பத்தி நடக்கிறது.
கோடை வெயிலின் தாக்கத்தால் உப்பு உற்பத்தி பெருகியதால் அதனை சேகரித்து கரையோரங்களில் குவித்து வைக்கின்றனர். இங்கு விளைவிக்கப்படும் உப்பு உணவு தேவைக்காகவும், துாத்துக்குடியில் உள்ள உரத் தொழிற்சாலை, கெமிக்கல் தொழிற்சாலைகளுக்கு லாரிகளில் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
ஒரு டன் உப்பு ரூ.1200 முதல் விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் உப்பள தொழிலாளர்கள் அதிகாலை, மாலை நேரங்களில் பணி செய்து உப்புகளை சேகரிக்கின்றனர்.

