/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மணல் திருட்டு; 4 பேர் மீது வழக்கு
/
மணல் திருட்டு; 4 பேர் மீது வழக்கு
ADDED : செப் 04, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கோட்டக்கரை ஆறு ஓடைக்கால் பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் வரதராஜனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதிக்கு போலீசாருடன் சென்ற வருவாய்த் துறையினர் அப்பகுதியில் மணல் திருட்டில் ஈடுபட்ட டிப்பர் லாரி மற்றும் மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
மணல் திருட்டு குறித்து மண்டல துணை தாசில்தார் உதயகுமார் புகாரில் மண் அள்ளும் இயந்திரத்தின் டிரைவர் மாதவனை கைது செய்த போலீஸ் எஸ்.ஐ., முகமது சைபுல், தப்பி ஓடிய மேலும் மூன்று பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகிறார்.