/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மணல் திருட்டு டிராக்டர் பறிமுதல்
/
மணல் திருட்டு டிராக்டர் பறிமுதல்
ADDED : மே 03, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: கோட்டைக்கரையாறு ஆர்.எஸ்.மங்கலம் அருகே வெட்டுக்குளம் பகுதியில் ஆற்றில் மணல் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற திருப்பாலைக்குடி போலீசார் அப்பகுதியில், அரசு அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளிச் சென்ற டிராக்டரை பறிமுதல் செய்தனர். மணல் திருட்டில் ஈடுபட்ட வெட்டுக்குளத்தை சேர்ந்த சரவணன் 40, மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.