/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தோணிப்பாலம் இடுக்கில் வளரும் மரக்கன்றுகள்
/
தோணிப்பாலம் இடுக்கில் வளரும் மரக்கன்றுகள்
ADDED : மே 28, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து திருப்புல்லாணி செல்லும் வழியில் 7 கி.மீ., தொலைவில் தோணிப் பாலம் அமைந்துள்ளது.
உப்பளக்கரையோரம் அருகே கொட்டகுடி ஆற்றின் வழியாக செல்லக்கூடிய வெள்ள நீர் சேதுக்கரை கடலில் கலக்கிறது. இதன் நடுவே கட்டப்பட்ட தோணி பாலத்தின் இடுக்குகளில் அதிகளவு மரக்கன்றுகள் அடர்ந்து வளர்ந்து வருகிறது. இதனால் பாலத்தின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.
பாலத்தின் நடுவில் தார் ரோட்டில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது. பக்கவாட்டு பகுதிகளில் அதிகளவு மணல் தேங்கியுள்ளது. இதனால் விபத்து அபாயம் நிலவுகிறது.