/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சீமைக்கருவேலம் ஆக்கிரமிப்பில் சாயக்கார ஊருணி
/
சீமைக்கருவேலம் ஆக்கிரமிப்பில் சாயக்கார ஊருணி
ADDED : ஆக 29, 2024 11:23 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் நகராட்சி கட்டுபாட்டில் உள்ள சாயக்கார ஊருணி பராமரிக்கப்படாமல் நீர்பிடிப்பு பகுதிகளில் சீமைக்கருவேலம் வளர்ந்தும், கழிவுநீர் தேங்கி குப்பை தொட்டியாவதால் சுகாதாரக்கேட்டால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ராமநாதபுரம் வெளிப்பட்டணம் ஓம்சக்தி நகருக்கு செல்லும் வழியில் உள்ள சாயக்கார ஊருணி குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது. ஊருணியின் நீர்வரத்து வாய்க்கால் பராமரிக்கப்படாமல் வீணாகியுள்ளது.
தற்போது ஊருணியில் குப்பை, கழிவுநீர் கலந்து தண்ணீர் மாசடைந்துள்ளது. கரைப்பகுதியில் முழுமையாக சீமைக்கருவேல வேலமரங்கள் வளர்ந்துள்ளன. துர்நாற்றம், கொசுத்தொல்லையால் இப்பகுதி மக்கள் தினமும் சிரமப்படுகின்றனர்.எனவே சாயக்கார ஊருணியை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும். கரையை பலப்படுத்தி நீர்வரத்து வாய்க்கால்களை துார்வார நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

