/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுட்டெரிக்கும் வெயில்: கால்நடைகள் பாதிப்பு நிழலில் தஞ்சம் அடைகின்றன
/
சுட்டெரிக்கும் வெயில்: கால்நடைகள் பாதிப்பு நிழலில் தஞ்சம் அடைகின்றன
சுட்டெரிக்கும் வெயில்: கால்நடைகள் பாதிப்பு நிழலில் தஞ்சம் அடைகின்றன
சுட்டெரிக்கும் வெயில்: கால்நடைகள் பாதிப்பு நிழலில் தஞ்சம் அடைகின்றன
ADDED : மே 09, 2024 05:11 AM
கடலாடி: கடலாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் ஆடு, மாடு மற்றும் செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்காக கால்நடை வளர்ப்போர் கொண்டு செல்கின்றனர். அக்னி வெயிலின் தாக்கத்தால் சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் ஆடு, மாடுகள் மரத்தின் நிழலை தேடி ஒதுங்குகின்றன.
ஆட்டுக்கிடை அமைக்கும் விவசாயி முருகன் கூறியதாவது: விவசாய நிலங்களில் நிலத்தின் உரிமையாளரிடம் உரிய அனுமதி பெற்று ஆட்டுக்கிடை அமைக்கின்றோம். இவற்றின் மூலம் இயற்கை உரங்கள் நிலங்களுக்கு கிடைக்கிறது. சுட்டெரிக்கும் வெப்பத்தால் காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை மேய்ச்சலுக்கு செல்லக்கூடிய செம்மறி ஆடுகள், ஆடு மாடுகள் மரத்தின் நிழலில் ஓய்வெடுக்கின்றன.
ஊருணி, குளங்களில் கால்நடைகள் தண்ணீர் தேவைக்காக தஞ்சம் அடைகின்றன. வெயிலின் தாக்கம் குறைந்தவுடன் ஆர்வமுடன் மேய்ச்சலில் ஈடுபடுகின்றன. கோடை காலத்தில் கால்நடைகளுக்கு வழங்கக்கூடிய தீவனங்கள் கால்நடை மருத்துவரின் அறிவுரைப்படி வழங்கப்படுகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் கோடை வெப்பத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் ஏராளமான கோழிகள், சேவல்களுக்கு கழிசல் நோய் ஏற்பட்டு பலியாகி உள்ளன. எனவே கால்நடை மருத்துவர்கள் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் நலன் கருதி கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்றார்.