/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராஜ அலங்காரத்தில் செந்திலாண்டவர்
/
ராஜ அலங்காரத்தில் செந்திலாண்டவர்
ADDED : மார் 14, 2025 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வைகை ஆறு படித்துறையில் அமைந்துள்ள சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழாவில் இன்று பக்தர்கள் திருச்செந்துார் சைக்கிள் யாத்திரை துவங்க உள்ளனர்.
இக்கோயிலில் மாசி மக விழா மார்ச் 10ல் துவங்கி சண்முகார்ச்சனை, திருவிளக்கு வழிபாடு, பால்குடங்கள் எடுத்தல் என நடந்தது. நேற்று முன்தினம் இரவு வள்ளி, தெய்வானையுடன் முருகன் புஷ்ப சப்பரத்தில் வீதி உலா வந்தார்.
இன்று காலை சிறப்பு அபிஷேகம் நிறைவடைந்த பின் நுாறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் 49ம் ஆண்டாக திருச்செந்துாருக்கு சைக்கிள் யாத்ரிரை மேற்கொள்ள உள்ளனர்.