/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளியில் சிறுதானிய உணவுத்திருவிழா
/
பள்ளியில் சிறுதானிய உணவுத்திருவிழா
ADDED : ஆக 29, 2024 11:20 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் சமூக நலன், மகளிர் உரிமைத்துறையின் சத்துணவு திட்டம் சார்பில் சிறுதானிய உணவுத்திருவிழா அறிஞர் அண்ணாதுரை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்தது.
முன்னதாக அரண்மனையில் இருந்து சிறுதானிய உணவு குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை கூடுதல் கலக்டர் வீர்பிரதாப் சிங் துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கப்பள்ளி) பிரின்ஸ் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஜெயந்தி வரவேற்றார்.பள்ளிவளாகத்தில் சிறுதானியங்களில் தயார் செய்த உணவுப்பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர். ராமநாதபுரம் வட்டாரகல்வி அலுவலர் ராமநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ராணி, உதவி கணக்கு அலுவலர் அனுசுயாதேவி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தர்மர், ஜெயராஜ், உதவி தலைமையாசிரியர் குணசேகரன், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.

