/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சமூக பாதுகாப்பு திட்டம் தாசில்தார் இன்றி சிக்கல்
/
சமூக பாதுகாப்பு திட்டம் தாசில்தார் இன்றி சிக்கல்
ADDED : ஆக 23, 2024 03:49 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி இல்லாததால் விண்ணப்பதாரர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பணியிடம் ஒரு மாதத்திற்கும் மேலாக காலியாக உள்ளது.
முதியோர் உதவித்தொகை விண்ணப்பங்கள், குடும்பத் தலைவருக்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, சாலை விபத்துக்கள் தொடர்பான உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்ட உதவித்தொகை விண்ணப்பங்களை பயனாளிகள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளனர். ஆனால் பரிசீலனை செய்ய வேண்டிய அதிகாரி இல்லாததால் ஏராளமான விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளன.
இதனால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் பேரிடர் பாதிப்புகளை ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கும் அதிகாரி இல்லாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் வலியுறுத்தினர்.