/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இரண்டாவது நாளாக ராமேஸ்வரம் மீனவரின் உடலை தேடும் வீரர்கள்
/
இரண்டாவது நாளாக ராமேஸ்வரம் மீனவரின் உடலை தேடும் வீரர்கள்
இரண்டாவது நாளாக ராமேஸ்வரம் மீனவரின் உடலை தேடும் வீரர்கள்
இரண்டாவது நாளாக ராமேஸ்வரம் மீனவரின் உடலை தேடும் வீரர்கள்
ADDED : ஆக 03, 2024 12:20 AM

ராமேஸ்வரம்:கடந்த ஜூலை 31ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு மீது இலங்கை கடற்படை வீரர்கள் வேண்டுமென்றே கப்பலால் மோதி மூழ்கடித்தனர். இதில் கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர் மலைச்சாமி உடலை இலங்கை வீரர்கள் மீட்டனர்.
மேலும் கடலில் தத்தளித்த மீனவர்கள் மூக்கையா, முத்து முனியாண்டியை உயிருடன் மீட்டு, யாழ்ப்பாணம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கடலில் மூழ்கிய மீனவர் ராமச்சந்திரன் 64, பலியாகி இருக்கலாம் என்பதால் அவரது உடலை 2ம் நாளாக நேற்றும் இலங்கை கடற்படை வீரர்கள் நெடுந்தீவு, புங்குடி தீவு, யாழ்ப்பாணம் கடலோர பகுதியில் தீவிரமாக தேடினர். ஆனால் உடல் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இன்றும் (ஆக.,3) தேடும் பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுடன் ராமேஸ்வரம் மீனவர்களும் தேடிச் செல்ல மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் சகாயம் தெரிவித்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் மீனவர் மலைச்சாமி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று மாலை இந்திய துணை துாதரக அதிகாரி ஜாய் முரளியிடம் உடலை இலங்கை போலீசார் ஒப்படைத்தனர்.