தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மாணவர்களுக்கு சுழற்கோப்பை

மாணவர்களுக்கு சுழற்கோப்பை

மாணவர்களுக்கு சுழற்கோப்பை


ADDED : ஏப் 12, 2024 10:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2024 10:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாயல்குடி : கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தலின் பேரில் கடுகுச் சந்தை அரசு உயர்நிலைப் பள்ளியில் சைல்டு என்ற அமைப்பில்மாணவர்கள் வண்ணங்களின் அடிப்படையில் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி மற்றும் கல்வி இணை செயல்பாடுகளின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தரநிலை வழங்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது. மூன்றாம் பருவத்தில் அனைத்து திறன்களிலும் முதலிடம் பெற்ற அணிக்கு சுழற் கோப்பை வழங்கும் விழா பள்ளியில் நடந்தது.

தலைமையாசிரியர் ராஜேஷ் வின்சென்ட் ஜெய் சிங் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

ஊராட்சி தலைவர் காளிமுத்து, பள்ளி மேலாண்மை குழு தலைவி முத்து, தமிழாசிரியர் செலஸ்டின்மகிமை ராஜ், குழு பொறுப்பாசிரியர் லட்சுமணன், பிரபு இமானுவேல் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு சுழற்கோப்பையை வழங்கினர்.

அடுத்த கல்வியாண்டின் முதல் பருவத்தில் வெற்றி பெறும் அணியினருக்கு வழங்கப்படுவதற்காக பின்னர் தலைமை ஆசிரியரிடம்சுழற் கோப்பை ஒப்படைக்கப்பட்டது.

மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியை பாரதி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us