ADDED : ஜூலை 02, 2024 06:06 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே பெரியபட்டினத்தில் கெட்டுப்போன மீன்களை உணவு பாதுகாப்புத்துறையினர் அழித்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் விஜயக்குமார் அறிவுறுத்தலின் பேரில் பெரியபட்டினம் பகுதியில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், மீன் வள ஆய்வாளர் சாகுல் அமீது, சாகர் மித்ரா, பணியாளர் இலக்கிய வேந்தன் ஆகியோர் இணைந்து பெரியபட்டினம் மீன் மார்க்கெட்டில் ஆய்வு நடத்தினர்.
அனைத்து மீன் கடைகளும் உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம் பெற அறிவுறுத்தப்பட்டது. மீன்களில் ஏதும் வேதிப்பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என சோதனை செய்தனர். இதில் ஏதும் வேதிப்பொருட்கள் இல்லை. விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன மீன்கள் 11 கிலோவை பினாயில் ஊற்றி அழித்தனர்.
பிளாஸ்டிக் பயன்படுத்திய உணவகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அனைத்து கடைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.