/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் விளையாட்டு விழா
/
செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் விளையாட்டு விழா
செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் விளையாட்டு விழா
செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் விளையாட்டு விழா
ADDED : ஏப் 18, 2024 05:08 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் ஆண்டு விளையாட்டு விழாவும், ஆண்டு விழாவும் நடந்தது.
செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ராஜாத்தி, செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் சானாஸ் பரூக் ஆகியோர் விழாவை தொடங்கி வைத்தனர்.
கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் ஆண்டு அறிக்கையும், விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் காஞ்சனா விளையாட்டுத்துறை அறிக்கையும் வாசித்தனர்.
சிறப்பு விருந்தினராக மதுரை மண்டல கல்லுாரிக்கல்வி முன்னாள் இயக்குநர் கூடலிங்கம் மாணவர்களிடம் உங்களது போக்கில் ஒழுக்கமும், படிப்பும், உடலுறுதியும் இருந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்றார்.
போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு கேடயமும், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஆடை வடிவமைப்புத்துறையின் தலைவர் சித்ராதேவி நன்றி கூறினார்.
அழகப்பா பல்கலை மாலை நேரக்கல்லுாரியின் முன்னாள் இணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். வணிக கணினிப்பயன்பாட்டியல் துறைத்தலைவர் ராஜமகேந்திரன் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை கல்லுாரியின் நிர்வாக அலுவலர் சாகுல்ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா செய்தனர்.---------

