/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறி விட்டது இலங்கை மீனவர் அமைப்பு குற்றச்சாட்டு

ADDED : பிப் 26, 2025 02:10 AM
ராமநாதபுரம்:''எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது,'' என, இலங்கை மன்னார் மாவட்ட மீனவர்கள் கூட்டுறவு சமாஜத்தின் செயலாளர் முகமது ஆலம் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து எல்லை தாண்டியதாக கைது செய்து வருகின்றனர். தமிழக மீனவர்களும் இதை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை தமிழக அரசு தடுக்க தவறிவிட்டதாக இலங்கை மீனவர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக இலங்கை மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவு சமாஜத்தின் செயலாளர் முகமது ஆலம் கூறியிருப்பதாவது: இரண்டு நாட்களாக இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருவதை கவனித்து வருகிறோம். நாங்கள் இலங்கை கடற்படையினரை தொடர்ந்து வலியுறுத்துவதால் தான் இந்திய மீனவர்களை அவர்கள் கைது செய்கின்றனர்.
எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்கள் கட்டுப்படுத்தப்படுகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மீன்பிடி தொழிலுக்கு வரும் போதே எல்லை தாண்டி மீன் பிடிக்க கூடாது என வலியுறுத்தப்படுகிறது. இருந்தும் விசைப்படகுகளில் கடல் வளங்களை அழிக்கும் விதம் எல்லை தாண்டி கடற்கரையோர பகுதிகளில் வந்து மீன் பிடிப்பதால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இப்படி எல்லை தாண்டி வரும் மீனவர்களை கட்டுப்படுத்த தமிழக அரசும் தவறி விட்டது.
மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நாங்கள் தமிழக மீனவர்களுக்கு வலியுறுத்துவது எல்லை தாண்டி வராதீர்கள். வரும் காலங்களில் இது போன்ற மீனவர்கள் கைது இல்லாத நிலை ஏற்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.