/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.2000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்
/
ரூ.2000 லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., சஸ்பெண்ட்
ADDED : மே 19, 2024 02:02 AM

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் குற்ற வழக்கிலிருந்து ஜாமினில் விடுவிக்க ரூ.2000 லஞ்சம் வாங்கிய சிறப்பு எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யபட்டார்.
தொண்டி அருகே பெருமானேந்தலைச் சேர்ந்த லாரி உரிமையாளர் வேல்முருகன் 42. மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை சம்பந்தமாக உறவினர்களுடன் இவருக்கு தகராறு ஏற்பட்டது. வேல்முருகன் புகாரில் முகேஷ் 21, உள்ளிட்ட 2 பேர் மீதும், முகேஷ் புகாரில் வேல்முருகன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மேலும் ஒருவர் வேல்முருகன் மீது புகார் செய்ததால் அதுகுறித்து வழக்குப்பதியாமல் இருக்கவும், ஏற்கனவே பதிவான வழக்கில் ஜாமினில் விடுவிக்கவும் வேல்முருகனிடம் எஸ்.எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் ரூ.3000 லஞ்சம் கேட்டார். பிறகு பேரம் பேசி ரூ.2000 ஐ தொண்டியில் உள்ள ஒரு பேக்கரி வாசலில் வைத்து வேல்முருகன் கொடுத்த போது ராமகிருஷ்ணனை லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,ராமச்சந்திரன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவரை எஸ்.பி., சந்தீஷ் சஸ்பெண்ட் செய்தார். அதற்கான உத்தரவு சிறையில் உள்ள ராமகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.

