/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு அலுவலகங்கள் முன் தேங்கியுள்ள மழை நீர்
/
அரசு அலுவலகங்கள் முன் தேங்கியுள்ள மழை நீர்
ADDED : ஆக 21, 2024 08:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை பகுதியில் சில நாட்களாக மழை பெய்து வருவதால் திருவாடானை தாலுகா அலுவலகம், சார்நிலை கருவூலம், சார்பதிவாளர் மற்றும் இ-சேவை மையம் முன்பு தண்ணீர் தேங்கியிருப்பதால் அலுவலகங்களுக்கு பல்வேறு வேலைகள் சம்பந்தமாக செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிறு மழைக்கே இந்த நிலை என்றால் கனமழை பெய்தால் பெரும் பாதிப்பு ஏற்படும்.
ஆகவே அரசு அலுவலங்கள் முன்பு மழை நீர் வடிகால் வசதி செய்ய சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

