/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி, மண்டபத்தில் ரயிலை நிறுத்துங்க
/
பரமக்குடி, மண்டபத்தில் ரயிலை நிறுத்துங்க
ADDED : மார் 30, 2024 04:48 AM
ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் ரயில்களை பரமக்குடி, மண்டபம் ரயில் நிலையங்களில் நிறுத்தம் வேண்டும் என்று வர்த்தகர் சங்கம் சார்பில் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
ராமேஸ்வரத்திலிருந்து மங்களூரு, ஹூப்ளி, அயோத்திக்கும் இயக்கப்படும் பெரோஸ்பூர் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் பரமக்குடி, மண்டபம் ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும். பரமக்குடி நகராட்சி பகுதி. வர்த்தக தொடர்பு அதிகம் உள்ள பகுதியாகும்.
மண்டபம் பகுதியில் மீனவர்கள் அதிகம் உள்ளனர். இந்த பகுதிகளில் ரயில் நிறுத்தம் இருந்தால் அப்பகுதியில் உள்ள மக்கள் பயனடைவார்கள். உச்சிப்புளி ரயில் நிலையத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில், திருப்பதி மீனாட்சி ரயில், கோவைக்கு இயக்கப்படும் ரயில்களை நிறுத்தம் வேண்டும் என வர்த்தகர் சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜன் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

